2025 மே 05, திங்கட்கிழமை

முல்லைத்தீவு ஊடகவியலாளர்களுக்கு கடும் கெடுபிடி

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும், முல்லைத்தீவு மாவடடத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக,  முல்லைத்தீவு  நகர் பகுதிக்கு, செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். குறிப்பாக பொலிஸார் அனுமதி வழங்கினாலும், குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்துக்கு, வெள்ளிக்கிழமை (21), செய்தி அறிக்கையிடலுக்குச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தான் ஊடகவியலாளர் என்றும் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமைய செய்தி சேகரிக் செல்வதாகவும், படையினருக்கு தெரிவித்த போதும், படையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

குறித்த வீதி ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பலர்  தங்களை அடையாளப்படுத்தி சென்று வருக்கின்ற  நிலையில், ஊடகவியலாளருக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவுக்கு சென்ற மற்றுமோர் ஊடகவியலாளரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஊடகங்களுக்கு அனுமதி உள்ளதாகத் தெரிவித்த போதும், அவருக்கு செல்ல  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், குறித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை அழைத்து குறித்த ஊடகவியலாளர் கலந்துரையாடி, ஊடகவியலாளருக்கு செல்ல அனுமதி உள்ளது என தெரிவித்ததை அடுத்து, பொலிஸ் அதிகாரி அவருக்கு அனுமதி வழங்கினார். இருந்தபோதும், இராணுவத்தினர் அவரை அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, சுமார் 15 நிமிடங்களில் பின்னர், உரிய தரப்புக்களின் உத்தரவுக்கமைய, ஊடகவியலாளரின் விவரங்களை பதிவுசெய்து கொண்டு குறித்த ஊடகவியலாளரை செல்ல அனுமதித்தனர். 

முல்லைத்தீவில் மாத்திரம் ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் இவ்வாறு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X