2025 மே 23, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பி​ரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால், தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பவதாகவும் இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 250க்குகும் மேற்பட்ட படகுகள் சடடவிரோதத் தொழில்களில் ஈடுபட்டு வருவதுடன், உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலையிழுத்தல், தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தமது தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக, முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சட்டவிரோத தொழில் அனைத்தும் பொலிஸாரினதும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாறான ஒத்துழைப்புகளால் இதனைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாகவும் பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X