2025 மே 01, வியாழக்கிழமை

’முல்லை நகருக்குள் பஸ்கள் இல்லை’

Niroshini   / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகருக்குள், பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அப்பகுதி மக்கள், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர், தற்போது சந்தை இயங்குகின்ற பகுதிக்கு முன்பாக இருந்தே, உள்ளுர், வெளியிடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெற்றன என்றனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு அருகில் பஸ் நிலையம் இயங்கத் தொடங்கின. எனத் தெரிவித்த மக்கள், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரை நேரடியாகச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட நகர அபிவிருத்திக் குழு, தற்போதைய பஸ் நிலையத்தில் இருந்து பணியில் ஈடுபடுகின்ற அனைத்து பஸ்களும் முல்லைத்தீவு நகருக்குள் வந்து 05 நிமிடங்கள் தரித்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறினர்..

இதையடுத்து, மாவட்டச் செயலாளர் எடுத்த நடவடிக்கை காரணமாக, பஸ்கள் அனைத்தும் முல்லைத்தீவு நகருக்குள் சென்று தரித்துச் சென்றன எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இவை ஒரு மாதம் நீடித்த நிலையில், தற்போது பஸ்கள் நகருக்குள் வருவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .