Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 11 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன்
முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடையாளம் காணமுடியாத நிலையில் மீட்கப்பட்ட பெண் பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொலை தொடர்பில் மரண விசாரணை அறிக்கை மற்றும் பொலிஸாரின் விசாரணைகளில் பின்னர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்ட உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய கிளிநொச்சியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 4ஆம் திகதியிலிருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். திருமணமாகி இரண்டு வயது வந்த பிள்ளைகள் உள்ள நிலையில், கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago