2025 மே 05, திங்கட்கிழமை

முழங்காவிலில் மாவீரர் நாளுக்குத் தடை

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வு நடத்துவதற்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், இன்று (23) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூநகரி பிரதேச சபையின் சமத்துவ கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஞானம் ரதிகரன், அந்தக் கட்சியின் முழங்காவில் பிரதேச அமைப்பாளர் குவேந்திரன் ஆகியோரின் பெயரில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்தத் தடை உத்தரவு  பெறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சடத்தின் கீழும், கொரோனாவினால் நாட்டில்  ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறந்துள்ளதாக  சௌபாக்கிய அமைச்சின் ஜெனரல் கடிதத்துக்கு அமைவாகவும், இத்தடை உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X