Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மே தினத்தை மாற்றுவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு அதிகாரமில்லையென, மாக்ஸிஸ லெனினிசக் கட்சியின் வன்னிப் பகுதிக்கான செயலாளர் இ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (26) விடுத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சர்வதேசத் தொழிலாளர் தினமானது, வருடாந்தம், மே மாதம் முதலாம் திகதியன்றே நினைவுகூரப்பட்டு வருவது, சர்வதேச நடைமுறையாக உள்ளது. அந்தவகையில், மே தின நாளை மாற்றுவதற்கோ நிராகரிப்பதற்கோ, இலங்கையின் தற்போதைய தேசிய அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை.
“இம்முறை மே தினத்தில், உழைக்கும் தமிழ்த் தேசிய இனத்தினுடைய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அதாவது “தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வை”, “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்”, “காணாமற்போனோருக்கு பதில் கூறு”, “பொதுமக்களின் நிலங்களில் இருந்து, இராணுவமே வெளியேறு”, “அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறை” எனும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, மே முதலாம் திகதியை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர், நாட்டின் மூன்று முக்கிய இடங்களில், மேதின நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.
“மலையகத்தில் - நுவரெலியாவிலும், யாழ்ப்பாணத்தில் - புத்தூரிலும், வன்னியில் - வவுனியாவிலும், எமது கட்சியின் மேதின நிகழ்வுகளை, புரட்சிகரமான நினைவுகளாக முன்னெடுக்க, முடிவு செய்துள்ளோம். அந்த அடிப்படையில், வவுனியாவில் உழைப்பாளர் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும், எமது கட்சி ஏற்பாடு செய்துள்ளது” என, அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago