Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - ஆரோக்கியபுரம் கிராமத்தில், முன்னெடுக்கப்பட்டு வந்த பொதுமைதான நிர்மாணப் பணிகள் அக்கராயன் பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
துணுக்காய் பிரதேச செயலகத்தின் எட்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதான நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற காணி, கிளிநொச்சி மாவட்டத்துக்குரியது எனத் தெரிவித்தே, அக்கராயன் பொலிஸார் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தியுள்ளனர்.
இக்காணி முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதென, அப்பகுதி பொது அமைப்புகளால் தெரிவிக்கப்பட்ட போதும், கிளிநொச்சி மாவட்ட வனவளத் திணைக்களம் காணியை உறுதிப்படுத்தும் வரை வேலைகளை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மைதானம் நிர்மாணிக்கப்படுகின்ற காணி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குரியதெனத் தெரிவித்த பொது அமைப்புகள், மைதானத்துக்கு அருகிலான நிரந்தர வீடுகள், முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலகத்தால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .