2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மொத்தவியாபார சந்தை செயற்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை, நாளை (12) முதல் 20ஆம் திகதி வரை கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வவுனியா நகரப்பகுதி சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் மரக்கறிகளை கொள்வனவுசெய்வதற்கும் விற்பனை செய்வதற்கும், வவுனியா காமினி வித்தியாலய மைதானத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக காமினி மகா வித்தியால மைதானத்தில் நீர் தேங்கிநிற்பதுடன், மன்னார் பிரதான வீதியும் வெள்ளக்காடாக காடசியளிக்கின்றது.

இந்நிலையில், மாற்று ஏற்பாடாக நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை, மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில், குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் என, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, நாளை காலை 5 மணியிலிருந்து மரக்கறிகளை குறித்த பகுதிக்கு எடுத்துவருமாறு விவசாயிகளிடம் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .