2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மோதல் சம்பவத்தில் ஒருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்கு முன் இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில், ஒருவர் இன்று (05) கைது செய்யப்பட்டாரென, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுபோதையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளனர்.  

கைதுசெய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .