2025 ஜூலை 02, புதன்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் நபர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேகநபரொருவரை, திங்கட்கிழமை (02) கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.கே.ரத்னசிங்கத்தின் ஆலோசனையின் பேரில் 05 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தண்ணீரூற்று - நெடுங்கேணி பிரதான வீதியின் களிக்காடு எனும் பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளை லொறியொன்றில் ஏற்றி, அவற்றின் மேல் உமி மூடைகளை அடுக்கிக்கொண்டு குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது முள்ளியவளை பொலிஸாரால் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 முதுரை மரக்குற்றிகள் மறைத்துக்கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த லொரியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன், முதுரை மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட லொறி முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக குறிப்பிட்ட முள்ளியவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .