2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீனவர்களின் பிரச்சினையை ஆராய்வதற்கான கூட்டம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டமொன்று, விரைவில் நடத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 28ஆம் திகதியன்று, கொழும்பில் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் விரைவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் எப்போது நடைபெறுமென மாவட்டச் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை (04) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. திகதி தீர்மானித்த பின்னர் கூட்டம் தொடர்பாக அறிவிப்போம்' என்றார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி தொழில் செய்தல் உட்பட பல்வேறு சட்டவிரோத மீன்பிடியில் தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் மாவட்டச் செயலகத்தில் விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .