Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 08 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், சிவநகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி தம்பதியினருக்கு, வவுனியா நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா நீதவான் எஸ்.லெனின்குமாரின் முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை (08), மேற்படி இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் தாம் கைதுசெய்யவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும், குறித்த முன்னாள் போராளிகளாகவே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக கூறப்பட்டது.
முன்னாள் போராளியென தெரிவித்து அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே, குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டதாக, அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
இதனடிப்படையில், குறித்த முன்னாள் போராளிகளான தம்பதியினரை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில், அவர்களை விடுவித்த நீதவான், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago