Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு, அவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம்வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மன்னார் மாவட்டப் பொது அமைப்புக்களின் ஒன்றியம், இவ்வாறான நிலைமை, கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள, மேற்படி ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'முன்னாள் போராளிகளின் தொடச்சியான உயிரிழப்பு, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாகவே, இவர்கள் உயிரிழந்தும் வருகின்றனர். எனவே, தமக்கு இரசாயன வழங்கப்பட்ட இரசாயன உணவும், தடுப்பிலிருந்த போது ஏற்றப்பட்ட ஊசி மருந்து தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாக, முன்னாள் போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புனர்;வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளிற்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவர்களது எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆகவே, இவர்களுடைய அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு, தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது, உங்களின் தார்மிகக் கடமையும் பொறுப்பும் ஆகும்' என்று அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago