2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூன்று முறிப்பு இணைப்பு வீதி புனரமைப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா - பாலமோட்டை மூன்றுமுறிப்பு இணைப்பு வீதி வடக்குமாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியொதுக்கீட்டின் கீழ் 6.7 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்;பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட பாலமோட்டை -  மூன்று முறிப்பு இணைப்பு வீதி கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டதுடன், இதனூடாக பயணிக்கும் மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடைநிதியின் கீழ் 6.7 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதியானது கடந்த காலங்களிலும் தற்போதும் பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம், மடத்து விளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .