2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மூன்று வீதிகள் புனரமைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்,ரஸீன் ரஸ்மின்

வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், நேற்று புதன்கிழமை (25) மூன்று வீதிகளின் புனரமைப் பணிகள், வடக்கு வீதி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பண்டிவிரிச்சான் வீதி, முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீதி, வவுனியா மாவட்ட, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கூளாங்குளம் வீதி ஆகிய வீதிகளின் புனரமைப்பு பணிகளே ஆரம்பிக்கப்பட்டன.

பண்டிவிரிச்சான் வீதியின், 2.5 கிலோமீற்றர் தூரம், புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீதியின் 0.5 கிலோ மீற்றர் தூரம், கூளாங்குளம் வீதியின் 1.5 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்கப்படவுள்ளது.

வடக்கு மீன்பிடி, போக்குவரத்து வீதி அபிவிருத்தி அமைச்சின் மீண்டெழும் செலவீனத்துக்காக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை,  அமைச்சின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஒதுக்கி வைத்த பின்னர், மிகுதியாக இருந்த 20 மில்லியன் ரூபாய் நிதி இருந்தது.

இந்த நிதியை வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்துக்கு அமைவாக, 5 மாவட்டங்களுக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் வீதம் ஒதுக்கி முக்கியமான வீதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உட்பட பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .