2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முயற்சியே எமது மூலதனம்: மாகாண கண்காட்சி

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடமாகாண கிராமஅபிவிருத்தி திணைக்களம் நடத்தவுள்ள “முயற்சியே எமது மூலதனம்” மாகாண கண்காட்சி, நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும், கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கிராமஅபிவிருத்தி திணைக்களத் தலைவர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் தலைமையில் 01ம் திகதி மாலை 3.00மணிக்கு ஆரம்பமாகவுள்ள  இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் கிராமஅபிவிருத்தி வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் திரு பா.டெனீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்

கௌரவ விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் கிராமஅபிவிருத்தி வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம், ஆகியோரும் கண்காட்சியின் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .