2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு நகரத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்படும்

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகரத்தில் பஸ் தரிப்பிடம் ஒன்றை அமைக்குமாறு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகரத்தில் சில பஸ்கள் தரித்துச் செல்வதில்லையென்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கண்காணிப்பில் தற்போது கூடுதலான பஸ்கள் முல்லைத்தீவு நகரத்தில் தரித்துச் செல்வதாகவே உணர்கின்றோம். முல்லைத்தீவு நகரத்தில் பஸ் தரிப்பிடம் இல்லை. அதனை உடனடியாக அமைக்குமாறு பிரதேச சபைக்குப் பணித்துள்ளோம். அதன் பின்னர் சகல பஸ்களும் தரித்துச் செல்வதற்கான கண்காணிப்பினை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நகர அபிவிருத்திக் குழு, மாவட்டச் செயலாளரை சந்தித்தபோது தற்போது மாவட்டச் செயலகத்துக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்திலிருந்து பயணிப்பை தொடங்கும் பஸ்கள் அனைத்தும் முல்லைத்தீவு நகர மத்திக்குள் சென்று பயணிக்க வேண்டுமென்ற கோரிக்கையினை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், மாவட்டச் செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பஸ்கள் நகர மத்திக்குள் சென்று தமது பயணிப்பை தொடர்ந்தன. இந்நிலையில் பல பஸ்கள் நகர மத்திக்குள் வருவதில்லையென்ற மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே மாவட்டச் செயலாளர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .