Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் சாரணர் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, மாபெரும் சாரணர் ஜம்போறி முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திங்கட்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ் இந்துக்கல்லூரி தனது 125 ஆம் ஆண்டு நிறைவை அடைந்துள்ள நிலையில், கல்லூரியில் சாரணர் அணி உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளும் வகையில் 'இந்துப்பொறி' எனப் பெயரிடப்பட்டு சாரணர் ஜம்போறி நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அந்தவகையில், இந்த ஜம்போறியானது எதிர்வரும் 7 ஆம் திகதி புதன்கிழமை முதல் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின், வவுனிக்குளப் பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இடம்பெறவுள்ளது.
இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் துறைசார் திணைக்களங்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.
கல்லூரியின் திரி சாரணர் அணியினர் தற்போது அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்” என்றார்.
“நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சாரணர்கள் பொறுப்பாசிரியர்களுடன் இதில்கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 1,000 சாரணர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஜம்போறி இடம்பெறுவதினால் சாரணர்கள் தமது பயிற்சி பாசறைகளை நிகழ்த்துவதற்கு ஏதுவாக அமையும் பிரதேசமாக காணப்படும்.
தேசிய 9ஆவது சாரணர் ஜம்போறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இது உண்மையில் கிளிநொச்சியில் இடம்பெறுவதாக இருந்தது. யாழ். மாவட்டம் சாரணரில் இணைந்து 100 ஆண்டை கடந்தமையினால் தேசிய சாரணர் ஜம்போறி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன் காரணமாக வன்னி பிரதேசத்தில் ஜம்போறி இடம்பெறவில்லை. இதற்காகவே யாழ். இந்துவின் ஜம்போறியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago