2025 ஜூலை 02, புதன்கிழமை

முல்லையில் காடழிக்கப்பட்டமை வெட்கக்கேடான விடயம்: சி.வி

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

எமது சொந்த காணியிலுள்ள ஒரு மரத்தை அனுமதியின்றி வெட்டினால் கூட பொலிஸார் கைது செய்யப்படும் நிலையில், முல்லைத்தீவில் காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் வெளியில் கொண்டு செல்லப்பட்டமை வெட்;கக்கேடான விடயம் ஆகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, முல்லைத்தீவு காடழிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா? என முதலமைச்சரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு கூறினார். இது கறித்து  தொடர்ந்து அவர் கூறுகையில்,

முல்லைத்தீவில் காடுகள் அழிக்கப்பட்டு, அங்குள்ள மரங்கள் வெளியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அந்த இடம் சமப்படுத்தப்பட்டு, வீதிகள் கூட யு.என்.கபிரட் நிறுவனத்தின் நிதியுதவியில் மாவட்டச் செயலருக்குத் தெரியாமல் போடப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினேன்.

மேலும், இது தொடர்பான அறிக்கையைத் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கோரியுள்ளதாகவும் ஜனாதிபதிக்குக் கூறினேன். காடழிப்பு பாரதூரமான குற்றமாகும். யாராக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என முதலமைச்சர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .