Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என். நிபோஜன்
வடமாகாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் யாழ். குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் யு.பரஞ்சோதி, அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் து.து.பெலிசியன், அமைச்சின் கணக்காளர் திருமதி அனந்த கிருஷ்ணன் மற்றும் 5 மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில், கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகள், திணைக்களம், அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் செயற்பாடுகள் என்பவையும் முன்னாள் போராளிகளுக்காக வழங்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் முன்னேற்ற நிலைமைகள், அவர்களுக்குள்ள சவால்கள் என்பன விசேடமாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago