2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிக்குளம் கிராம வீடுகள் 6 மாதத்தில் கையளிக்கப்படும்

George   / 2017 ஏப்ரல் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் குடும்பத்தினர், 6 மாத காலத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மக்களிடம் வீடுகள் கையளிக்கப்படுமென்று, கடற்படை தளபதி உறுதியளித்தார்” என, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்டன் தவராசா தெரிவித்தார்.

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை கடற்படையினர் விடுவித்துள்ள நிலையில், அந்த மக்கள், ஞாயிற்றுக்கிழமை தமது சொந்த இடத்துக்குச் சென்றனர்.

இதன்போது, நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை அன்டன் தவராசா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிக்குளம் மக்கள் தற்போது ஆலயம் சார்ந்த பகுதிகளில் தங்கியுள்ளனர். மக்கள் எந்த பாதையை பயண்படுத்துவது,எங்கு செல்வது,எவ்வாறு அவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்வது பற்றி நாங்கள் கலந்துரையாடல் செய்வதற்கு இங்குள்ள கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் சிறிய குழுவாக செயற்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான முறையில் முடிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

“ஆலயத்தில் இருந்து கொண்டு, தற்காலிக குடிசைகளை இம்மக்கள் அமைக்கவுள்ளனர். கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் காணிகளை விரிவுபடுத்தவுள்ளோம்.

“மீனவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி முள்ளிக்குளம் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட முடியும். இங்குள்ள கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .