2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் வெடிக்காத ரவைகள்

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைகள் குவிந்து கிடப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மண்ணில் புதையுண்ட நிலையில் துப்பாக்கி ரவைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இதில் பல வெடித்த நிலையிலும், இன்னும் பல வெடிக்காத நிலையிலும் காணப்படுகின்றன. இவை தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது.

அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு குடியேறியுள்ள நிலையில், இத்துப்பாக்கி ரவைகள் அகற்றப்படாத நிலையில் இன்றும் காணப்படுகின்றமை அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .