Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணி, இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்ப்பட்ட வன்னிவிளாங்குளம் சந்திப்பகுதியில் மாவீரர் துயிலுமில்ல காணி உள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், மாவீரர் துயிலுமில்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் இங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.
“துயிலுமில்ல காணியலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” எனதொடர்ச்சியாக பல கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டன.
இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறை விசாரணையின் போதும், “மாவீரர் துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்” என கோரியிருந்தனர்.
இந்நிலையில் இந்தக்காணி, உத்தியோகப்பூர்வமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago