Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 மே 24 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு எழுத்து மூலம் அழைத்து 3000 பேர் உள்ள இடத்தில் யாப்புக்கு மாறாக கோரமின்றி 34 பேருடன் புதிய நிர்வாகத்தை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தெரிவு செய்துள்ளது” என மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் இதுவரையான காலத் தலைவரான ஆ.சிவநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மட்ட உறுப்பினர்களை கடந்த திங்கட்கிழமை (21) மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் மாகாண பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இதற்கமைவாக நிர்வாக உறுப்பினர்களும், பிரதேச மட்ட உறுப்பினர்களும் என சுமார் 30 பேர் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தோம். ஆனால் அங்கு விசேட கலந்துரையாடலுக்கு பதிலாக கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு நாம் எங்களுடைய கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம், மூவாயிரம் பேர் உள்ள இடத்தில் முப்பது பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமானது, அத்தோடு கோரமும் இல்லை எனவே தாங்கள் எம்மை எழுத்து மூலம் என்ன நோக்கத்திற்காக அழைத்தீர்களோ அதனை மேற்கொள்ளுங்கள், புதிய நிர்வாகத்தை தெரிவை மேற்கொள்ள வேண்டாம். புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ள வேண்டுமாயின் 14 நாட்களுக்கு முன் அறிவித்தல் விடப்பட்டு பெரும்பாலன உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியோடு எதிர்ப்பினையும் வெளியிட்டோம். இருப்பினும் எமது கோரிக்கையினையும், எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது மாகாண சமூக சேவைகள் பணிப்பாளரின் முன்னிலையில் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக புதிய நிர்வாகத்தை மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் மேற்கொண்டுள்ளார” என மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் ஆ.சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலர் வே.தபேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
“விசேட கலந்துரையாடலுக்காகவே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வருகை தந்தவர்கள் புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. 3 ஆயிரம் பேர் மாவட்டத்தில் மாற்று வலுவுள்ளோராக உள்ள போதும் சுமார் 300 வரையானோரே அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் கடந்த திங்கட்கிழமை 36 பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைவர் தெரிவும் கோரமின்றியே இடம்பெற்றது” எனத் தெரிவித்தார்.
7 minute ago
12 minute ago
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
14 minute ago
22 minute ago