Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 27 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,892 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 283 பேர், தமது பார்வையை இழந்த நிலையில் உள்ளனர் என்றும், கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம், பலமுறை இடப்பெயர்வுடன் கூடிய பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது.
உறவுகளின் உயிரிழப்புகளுடன், தங்கள் உடல் உறுப்புகளை இழந்த நிலையில், பல்வேறு வகையான பாதிப்புகளையும் மன உளைச்சல்களையும் சுமந்தவாறு, பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளில், தமது ஒரு கண்ணை இழந்த நிலையில் 240 பேரும் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் 43 பேரும் உள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில், ஒரு கண்னை இழந்த நிலையில் 49 பேரும் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் 12 பேருமாக, மொத்தம் 61 பேர் உள்ளனர்.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவில், 40 பேர் தமது ஒரு கண்ணை இழந்த நிலையிலும் இரண்டு கண்களை இழந்த நிலையில் 13 பேருமாக, மொத்தம் 53 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், தமது ஒரு கண்ணை இழந்த நிலையில் 42 பேர் வாழ்ந்து வருகின்றனர். கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவில் 108 பேர் தமது ஒரு கண்னை இழந்த நிலையிலும் 18 பேர் தமது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்” என, மாவட்டச் செயலகத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 minute ago
52 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
5 hours ago
5 hours ago