2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யுவதியைக் கடத்த முயன்ற 11 பேர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டைப் பகுதியில் வைத்து, 17 வயதான யுவதியொருவரைக் கடத்திச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புளியங்குளம் பொலிஸார், யுவதி​யைப் பத்திரமாக மீட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் 11 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 11 பேர், நேற்று இரவு 12. 30க்குக் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், யுவதியைக் கடத்திச் செல்வதற்குப் பயன்படுத்திய வௌ்ளைநிற வானும், ஓட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர், கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்திலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, வவுனியா, வடக்கு காஞ்சிராமோட்டை, நாவலர் பாம் பகுதியில் மீள் குடியேறி, வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், வெள்ளை ஹயஸ் ரக வான், ஓட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள், அந்த யுவதியைக் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் வாகனங்களை முற்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .