2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யானைத் தொல்லை அதிகரிப்பு

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் மாலை 4 மணிக்குப் பின்னர், வீதிக்கு வரும் யானைகளை கட்டுப்படுத்துமாறு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு. மணவாளன்பட்டமுறிப்பு, அம்பகாமம் ஆகிய கிராமங்களின் மக்கள் மாலை 4 மணிக்குப் பின்னர் வீதிகளுக்கு வரும் யானைகளினால் போக்குவரத்து செய்வதிலும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

ஒட்டுசுட்டானிலிருந்து மாலை 4 மணிக்குப் பின்னர் பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாகவும் மாற்றுவழிகளில் மக்கள் பயணிக்கின்றபோது, அவ்வழிகளில் யானைகளின் தாக்குதல் அச்சம் உள்ளது.

மாலை வேளைகளில் வீதிகளில் யானைகள் நடமாடுவதாகவும் மக்களினால் முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் கூட்டத்தில், யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் அமைப்பதென முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .