2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரயிலில் மோதுண்டு மௌலவி பலி

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

செட்டிகுளம் துடரிக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவைப் பகுதியில், இன்று (01) காலை, ரயிலில் மோதுண்டு, மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், செட்டிகுளம் - முதலியார் குளம் பகுதியைச் சேர்ந்த சகீது என்பவராவார்.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதுண்டே, இவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியில் இருந்து துடரிக்குளம் நோக்கி, தனது ஓட்டோவில் சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .