2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ரவிகரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டின் கீழ், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உட்பட ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.டெனிஸ்குமார், இன்று (21) உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 2 ஆம் திகதியன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் சேதமாக்கப்பட்டது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில், கடந்த 10ஆம் திகதியன்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்கள் மீதான வழக்கு விசாரணை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.டெனிஸ்குமார் முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் தாக்கப்பட்டமை மற்றும் அதன் சேதவிவரங்கள் தொடர்பிலான அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவில்லையென மன்றில் சுட்டிக்காட்டிய நீதவான், வழக்கு விசாரணையை, 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீரியல் வளத் திணைக்களத்தின் சொத்து சேத மதிப்பீடு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார், அதன் சேதவிவரம் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாவும் கூறினர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X