2025 மே 07, புதன்கிழமை

ரூ.2 கோடி பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், இன்று (07) மதியம், இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான  145 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை கைதுசெய்துள்ளதாக, ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.   

இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு, கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கூளர் ரக வாகனத்தை, இன்று மதியம், வவுனியா - ஓமந்தையில் அமைந்துள்ள  சோதனை சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன், வாகனத்தையும் அதில் பயணித்த சாரதி உட்பட இருவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மீட்கபட்ட கஞ்சாவின் பெறுமதி, சுமார் இரண்டு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர், நாளை (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X