2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வங்காலை கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு, வங்காலை கடற்கரையில்  இன்று திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் மாபெரும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களமும் இணைந்து, இச்சிரமதானத்தை முன்னெடுத்தன.

இதன்போது   கடற்படை,  பொலிஸார், நானாட்டன் பிரதேச சபை, வங்காலை மீனவர் சங்கம், சமூர்த்தி பயனாளிகள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .