2025 ஜூலை 05, சனிக்கிழமை

வசாவிளான் மத்திய கல்லூரி புறக்கணிப்பு

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

கல்வி அமைச்சால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத்திட்டத்தில், உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மத்திய கல்லூரி புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

1990ஆம் இடம்பெயர்வுக்குப் பின்னர், 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, தற்போது ஒரளவு கல்வி வளர்ச்சியினை எட்டி வருகின்றது.

மேற்படி வேலைத்திட்டத்துக்கான அங்குரார்ப்பணம், கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது. இத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுகடகான காசோலைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டத்துக்காக, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இரண்டு பாடசாலைகள் வீதம் தெரிவு செய்யப்பட்டன. 

ஆயிரம் பாடசாலைகள் தேசிய வேலைத்திட்டம், நவோதயா பாடசாலை திட்டம் ஆகியவற்றில் கடந்த வருடங்களில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகள், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளன. 

ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் வசாவிளான் மத்திய கல்லூரி உள்வாங்கப்பட்டிருந்தாலும் பாடசாலை உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்தமையால், பாடசாலை அதன் பயனை பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திலும் இந்தப் பாடசாலை உள்வாங்கப்படாமையானது, பாடசாலையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாடசாலை சமூகத்தினர் தமது விசனத்தை தெரிவிக்கின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .