2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க வேண்டும்

Niroshini   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க வேண்டிய தேவையுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் மிகமோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன், இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் கூட நிகழ்ந்துள்ளன.

எனவே, இப்பாலம் புனரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த பாலத்தை புனரமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான நிதி கிடைக்காமையினால் இதனைப் புனரமைக்க முடியாதுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .