2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள எந்தக் காணியும் விடுவிக்கப்படவில்லை

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இந்த அரசாங்கத்தின் காலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டன. சம்பூர்க் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள எந்தக் காணியும் விடுவிக்கப்படவில்லை என வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றபோதே, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வன்னியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதா? வலிகாமம் வடக்கு போல வன்னியிலும் பொதுமக்களின் காணிகளை விடுவித்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X