Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா - நவகம பகுதியில் உள்ள வயல் பகுதியில், நேற்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட தீ, அருகிலிருந்த ரயில் தண்டவாளம் வரை பரவியிருந்தது. இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த வவுனியா நகர சபை தீயணைப்புப் பிரிவினர், தீ பரவலைக் கட்டுப்படுத்தி, அயலில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாது தடுத்தனர்.
இந்தத் தீ விபத்தில், நவகம பாலம் புனரமைப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் தீக்கிரையாகின எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago