Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 ஜூலை 18 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தாம் உயிர் துறப்பதற்கு முன்னர் வயல் நிலங்களைப் பகிர்ந்தளியுங்கள்” என கிளிநொச்சி ஜெயபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பூநகரிப் பிரதேச செயலகத்தில், இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெயபுரம் கிராமத்தில், தென்னிலங்கையில் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்ந்தனர். இக்குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்படும்போது, தேவன்குளத்தின் கீழான, 500 ஏக்கருக்கு மேலான வயல் நிலம் பகிர்ந்தளிக்கப்படும் வரை, அரச நிவாரண உதவிகள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இதுவரையில் வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இந்நிலையில், பிரதேச செயலகத்துக்கு நேற்று முன்தினம் சென்ற ஜெயபுர கிராம மக்கள் பிரதிநிதிகள், மூன்றாவது தலைமுறையினர் ஜெயபுரம் கிராமத்தில் உருவாகி விட்டதாகவும் மூத்தோர்கள் உயிர் துறப்பதற்கு முன்னர் வயல் நிலங்களைப் பகிர்ந்தளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜெயபுரம் கிராமத்துக்கு சென்று, மக்களின் வயல் நிலங்களைப் பார்வையிட்டதாகவும் மிதிவெடிகளை காரணங்காட்டியே வயல் நிலம் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. வரும் காலப் போகத்தில், குறைந்தது 100 ஏக்கரிலாவது, இக்கிராம மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்து, இது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்வதாக, கூட்டத்தில் கலந்து கொண்டு இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .