Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வரட்சி காரணமாக, நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஒழுங்கான மழை வீழ்ச்சி இன்மையால், பல இலட்சம் பெறுமதியான நெல் செய்கைகள் அழிவடைந்திருந்தது. இந்த நிலையில், தொடர்சியான வரண்ட வானிலை நீடித்துவருவதால், நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.
வயல் நிலங்கள், சிறு குளங்கள் என அனத்துக்கும் நீர் வழங்கும் பிரதான குளங்கள் அனைத்தும் நீர் அற்று வரண்டு காணப்படுவதால் நன்னீர் மீன்களும் இறந்த நிலையில் காணப்படுவதுடன் நன்னீர் குளங்களுக்கு குல்லா படகுகளில் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் அதிகம் நீர் கொண்ட கட்டுக்கரை, ஈச்சளவாக்கை, சன்னார் ,கூராய் , பெரியமடு ஆகிய குளங்கள் அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் மீன்பிடியை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
அதே நேரத்தில், அதிக வெப்பம் காரணமாக முதலைகளும் குளங்களுக்குள்ளும் சிறிய அளவு நீர் நிலை காணப்படும் பகுதிகளுக்குள்ளும் நுழைவதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீன் பிடியை மேற்கொள்ளவேண்டிய் நிலையில் உள்ளதாகவும், கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக நீரியல் வள திணக்களம், மீன்பிடி அமைச்சு, சம்பந்தபட்ட அதிகாரிகள் என பல தரப்பினரிடம் தெரிவித்துள்ள போதும், இதுவரை எந்தவித நிவாரணமோ, மானியங்கலோ எங்களுக்கு வழங்கப்படவிலை எனவும் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தெரிவித்தனர்.
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
46 minute ago