Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
நாடளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோருக்கான வரவேற்று நிகழ்வு ஒன்று, புதுக்குடியிருப்பு - தேவிபுரம் நவமணி பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
தேவிபுரம் - ஆ பகுதியில் அமைந்துள்ள நவமணி பிள்ளையார் கோவிலின் அலங்கார உற்சவ திருவிழா, கடந்த பத்து நாள்கள் நடைபெற்று, தீர்த்த திருவிழா நேற்று நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோனோகராதலிங்கம், வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் வன்னி மாவட்ட மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எதிர்காலத்தில் மிகச்சசிறந்த எங்கள் சக்திக்கு எட்டிய சேவைகள் எங்களால் செய்யமுடியுமென்றார்.
“எதிர்வரும் 5 ஆண்டுகள் மிகவும் கடினமான, ஒரு பணி சவாலான பணிகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதற்கு உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு மக்களின் ஆதரவைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago