2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வருடந்த சம்பள படி நிலை கோரி வவுனியாவில் வேலை நிறுத்தம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஷ் மதுசங்க 

கடந்த 22 வருடங்களாக வருடாந்தம் வழங்கப்படுவதாக கூறிய சம்பள படி வழங்கப்பட வேண்டுமென கோரி, வவுனியா நகர சபை ஊழியர்கள், இன்று திங்கட்கிழமை (07)  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

1993ஆம் ஆண்டிலிருந்து நகர சபை ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றோம். ஆனால், அப்போதிலிருந்து பெற்றுத் தருவதாகக் கூறிய சம்பள படி, இன்று வரை வழங்கப்படவில்லையெனவும்  அரசாங்கத்தினால் மாதாந்தம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 2,100 ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லையெனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். 

வவுனியா நகரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக குப்பைகள் அகற்றுதல் மற்றும் வாய்க்கால்களை சுத்தம் செய்வதற்கும் ஊழியர்கள் நேற்றைய தினம் வருகைதரவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .