2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலயக் கல்விப் பணிமனை காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி முறியடிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, உதயநகர் மேற்கில் வலயக் கல்விப் பணிமனைக்காக ஒதுக்கப்பட்ட காணியொன்றை, தனிநபர் ஒருவருக்கு வழங்கும் நோக்கில், நிலஅளவை திணைக்களத்தினர் அளக்கும் முயற்சி, பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உதயநகர் வலயக் கல்விப் பணிமனைக்காக 2012ஆம் ஆண்டின் நான்கரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை தனிநபர் ஒருவருக்கு இன்று திங்கட்கிழமை வழங்குவதற்காக அளக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உதயநகர் மேற்கு கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது   செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த கால யுத்தத்தின் பின்னர், உதயநகர் மேற்கில் வாழும் பல குடும்பங்கள் காணிகள் அற்ற நிலையில், வாழ்ந்து வருகின்ற போதிலும், குறித்த காணியை தனிநபர் ஒருவருக்கு வழங்கும் முயற்சி பொது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கின் காரணமாகவே இந்தக் காணி தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உதயநகர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உதயநகர் மேற்கு பகுதியில் வலயக்கல்வி பணிமனை இயங்கக்கூடாது என அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குறித்த காணியில் வலயக்கல்வி பணிமனை இயங்கமுடியாது உள்ளதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், குறித்த காணி, கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை நிலஅளவையாளர்கள் குறித்த காணியை அளவிடும் முயற்சியில் ஈடுபட்ட போது, கிராம மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .