Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெறும் செயற்பாடு வவுனியாவிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை அறிவித்துள்ளது.
அக் கிளை இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி கையெழுத்துப் பெறும் செயற்பாடு, இலங்கையில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“அந்த வகையில், வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (28) பழைய பஸ் நிலையம், இலுப்பையடி, வைரவர் புளியங்குளம் சந்தி, குருமன்காடு சந்தி ஆகியவற்றிலும் செட்டிகுளம் பஸ் நிலையத்திலும் நெடுங்கேணி- பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும் காலை 8 மணியிலிருந்து கையொப்பம் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
“1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிக) எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிகக் கொடூரமான சட்டமாக தற்போதும் காணப்படுகிறது.
“இப்பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது. 2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது.
“இருப்பினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதாக உறுதியளித்த இவ்வரசு, தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை ‘சீர்திருத்தம்’செய்வதற்காக 2022 ஜனவரி 27ஆம் திகதி அதன் திருத்தத்துக்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
“இந்தப் பின்னணியில் நாம், பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்பேற்க வலியுறுத்துமாறு, சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago