Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
--க. அகரன்
இலங்கையில் சட்டவாட்சியை நிலைநாட்டவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் கோரி, வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது.
வடக்கு - கிழக்கு சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டம், வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கபட்டது.
இதன்போது, நீராவியடி பிள்ளையார் கோவிலில் தேரர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல்வலயத்தால் தமிழர்களது காணிகள் ஆக்கிரமிக்கபடுவதற்கு கண்டனம் தெரிவித்தும் திருகோணமலை - கன்னியா வெந்நிரூற்றில் பௌத்தர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் சட்டவாட்சியை நிலைநாட்டவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் ஐ.நாவின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்ததுடன், வவுனியா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்று மகஜர் ஒன்றையும் வழங்கியிருந்தனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago