Freelancer / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வவுனியாவில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இன்று இந்தக் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வவுனியாவின் இலுப்பையடி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, கனகராயன்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளிலும் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்துப் போராட்டத்தில் பங்குபற்றினர்.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுபர்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (K)
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago