2025 நவம்பர் 05, புதன்கிழமை

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்

Freelancer   / 2023 ஜூலை 21 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X