2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வவுனியா - நைனாமடுவில் நேற்று (06) மாலை,  மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

மாமடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. செனரத் தலைமையிலான பொலிஸார், நேற்று மாலை நெடுங்கேணி -  சேமமடு வீதியில் இருந்து வவுனியா - பூந்தோட்டம் நோக்கி சட்டவிரோதமான முறையில் 13 முதிரை குற்றிகள்  டாட்டா கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்கையில்  வாகனத்தை வழிமறித்துள்ளனர். எனினும் சாரதி வாகனத்தை நிறுத்தாது வேகமாக செலுத்தியுள்ளார்.

வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார், அக்போபுர - மாமடு பகுதியில் வாகனம் வீதியோரத்திலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, சோதனை மேற்கொண்ட பொலிஸார், அனுமதி பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தின் சாரதி,  உதவியாளர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா - சேமமடு, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 33, 25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .