Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 07 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், “பனை வளத்தைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில், வவுனியா - நெளுக்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலுள்ள பனந்தோப்புப் பகுதியில், இன்று (07) விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால், வரட்சி நிலவி, நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. மேலும், அதை நம்பி வாழும் குடும்பங்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது.
இதனால், பனை வளத்தைக் காத்து, எமது இருப்பைப் பாதுகாப்போமெனத் தெரிவித்தே, இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு இளைஞர்கள் ஒன்றுகூடி, மன்னார்- உயிலங்குளம் பகுதியில், “நுங்குத் திருவிழா” எனும் தொனிப்பொருளில், பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனம் பொருட்களுடன் கூடிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago