2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் காலை 11 மணிக்கு, இணைத் தலைவர்கள் தலைமையில்ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக, இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமானது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், வட மாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஏ. ஜெயதிலக மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .