க. அகரன் / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளராக தமிழ் கூட்டமைப்பின் து.நடராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
உப தவிசாளராக சுதந்திர கட்சியை சேர்ந்த வே.மகேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இன்று (17) மாலை உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வில் அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.நடராசிங்கம், தமிழர் விடுதலை கூட்டணியின் தம்பாப்பிள்ளை சிவராசா ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
இதில் து.நடராசிங்கம், 14 வாக்குகளை பெற்றார்.
பின்னர் உப தவிசாளருக்கான தெரிவில் சுதந்திர கட்சி சார்பில் வே.மகேந்திரன், தமிழ் கூட்டமைப்பு சார்பில் வே.குகதாசன் ஆகியோர் போட்டி இட்டிருந்த நிலையில், தமிழ் கூட்டமைப்பின் வே.குகதாசன் 14 வாக்குகளும், சுதந்திர கட்சி வேட்பளர் வே.மகேந்திரனுக்கு 15 வாக்குகளும் கிடைத்தன.
சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 1 உறுப்பினரும் தவிசாளர் தெரிவில் நடுநிலைமை வகித்ததுடன், உப தலைவர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடுநிலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது .
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago