2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா மாவட்டச் செயலாளர் பதவியேற்றார்

Editorial   / 2018 ஜூலை 07 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக, ஐ.எம். ஹனீபா, நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

வவுனியா முன்னாள் மாவட்டச் செயலாளர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட வாத்தியத்துடன் புதிய மாவட்டச் செயலாளர் வரவேற்கப்பட்டிருந்தார்.

இதன்போது,  மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர்.

இதையடுத்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் உரையாற்றியதன் பின்னர், புதிய மாவட்டச் செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது முன்னாள் மாவட்டச் செயலாளருடன் வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் தி. திரேஸ்குமார், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X