Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க, சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாளை (08), கனகராஜன்குளம் வைத்தியசாலையிலும், நாளை மறுதினம் (09), புளியங்குளம் வைத்தியசாலையிலும், வெள்ளிக்கிழமை (10), நைனாமடு பொதுநோக்கு மண்டபத்திலும், திங்கட்கிழமை (13), நெடுங்கேணி வைத்தியசாலையிலும், செவ்வாயக்கிழமை (14), கற்குளம் பொதுநோக்கு மண்டபத்திலுமாக 5 நிலையங்களில், காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை, பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று, மூன்றாவது தடுப்பூசி பூஸ்டரினை (பைசர்) பெற்று கொள்ள முடியும் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
14 minute ago